என்னவள் கண்கள் - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Tuesday, 20 November 2018

என்னவள் கண்கள்

என்னவளின் கண்களொன்றும்
எந்த திங்கள் போன்றும்
இல்லை!
அவளின் உதடுகள்
சிவப்பாகத் தான் இருக்கும்.
இருந்தும் அதைவிட செம்பவளம்
நிறத்தில் சிறப்பாக இருக்கும்!
பனியைப் போன்று அவள்
மேனியொன்றும் வெண்ணிறம்
கொண்டதல்ல!
தடித்த கறுத்த வயர்களாலானது
போன்ற அவள் கூந்தல் ஒன்றும்
கூடுதல் அழகில்லை!

சிவப்பு, வெள்ளை, ஊதா
என பலவண்ண ரோஜாக்கள்
பார்த்திருக்கின்றேன்.
நிச்சயம் எந்த ரோஜா போலும்
அவள் கண்ணம் இல்லையென்பேன்.

பேசும் அவளின், சுவாசப்பையில்
மூழ்கிவந்த மூச்சுக்காற்றை விட
பூசும் நறுமணங்கள் அதிக
வாசம் உடையது என்பதை
ஏற்பேன்!

அவள் பேசுவதை கேட்க்கப்
பிடிக்கும் தான்.
அதற்க்காக பாடவே
தெரியாத அவள்
பேசினால் காதிற்க்கினிய
இசையென்று கதைகள்
கூற மாட்டேன்!

தேவதையிறங்கி பூமியில்
தரிசனம் தந்து இதுவரை
நான் பார்த்ததில்லை.
பார்க்காமலேயே சொல்கின்றேன்.
அவள் ஒருபோதும் பார்ப்பதற்க்கு
தேவதை போலிருக்கப்
போவதில்லை.!

பிறர்போல்
பொய்கள் ஏதும் சொல்லவில்லை
மெய்கள் சொல்லி அவளை
என்றும் காதலிப்பேன் நிஜமாக...

(©"My Mistress" - William Shakespeare)

தமிழில் - Imaz

No comments:

Post a Comment