அழகு....
கொள்ளையழகு!
பிள்ளையமுதுக்கள் செய்வதெல்லாமே....
மலரின் மொட்டுக்களாய்,
மண்ணில் சிட்டுக்களாய்,
திரியும் சிறுபிஞ்சுக்கள்
விண்ணில் இல்லை போலும்.
வானுக்கும் ஆசை வந்து
மழையாய்ச் சிந்தி;
மழலைகளை தன் கையிலேந்த முயற்சிக்கையிலே,
தடையாக குடையொன்று காப்பாற்றிவிட்டது....
படையாக வந்த துளிகள் பாசத்திலானது என்றறியாமலே.....
©இளவரசன்
No comments:
Post a Comment