
சாவே நீ பெருமைப்படாதே...
உன்னைப் பலர்பார்த்து
அஞ்சுவதால் கர்வப்படாதே...
நீ அவர்களைக் கொலை
செய்வதாய் இருமாப்புக்
கொள்கிறாய். - அவர்கள்
இறக்கப்போவதில்லை.
முட்டாள் மரணமே!
புதிதாய் மறுவுலகில்
பிறக்கப்போகிறார்கள்.
தூக்கமும், ஓய்வும்
இறப்பின் தழுவல்கள் தான்.
நிழல்களே அத்தனை
சுகம் தரும்போது,
நிஜம் தரும் சுகம்
எப்படியிருக்கும்.
சிறந்த மனிதர்கள்
சீக்கிரம் இறப்பார்கள் என்பர்.
அவர்களின் உடலும், உயிரும்
உலகில் வாழ்ந்து,
வேதனை சோதனைப்படாமலேயே
சுலபமாக சுவர்க்கத்தில்
பிறப்பார்கள்.
மரணமே, நீ ஒரு அடிமை!
விதி, விருப்ப நியதி,
சந்தர்ப்பம் சொல்லும் தேதி,
அரசன் அளிக்கும் நீதி
இவர்கள் சொல்லும் பேச்சைக்
கேட்கும் வெறும் அடிமை நீ.
விஷம், வியாதி, யுத்தம்
இவற்றில் உயிர்பிழைக்கும்
கோழை நீ.
நீ தாலாட்டி கொள்ளச் செய்திடும்
உறக்கத்தை விட
போதையால் உண்டாகும்
நித்திரை நல்ல சுகமானது.
நீ தரப்போகும்
சிறு தூக்கத்தினில்
கண்விழித்து
நிலையான உலகில்
சாகாது நாமிருப்போம்.
சாவே நீ மட்டும் செத்துவிடு!
(©"Death Be Not Proud" - John Donne)
தமிழில் - Imaz
No comments:
Post a Comment