சின்ஞோவின் பாடல் - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Friday, 14 December 2018

சின்ஞோவின் பாடல்

சின்ஞோ வரம்போரம்
மூங்கில்மரம் வெட்டி
குடியிருக்க கூடாரம்
அமைத்தான்.
பாவம்,
மேற்கூறை மூட
வைக்கோல் கூட இல்லை.

இடமள்கொடவில்
பெருநிலங்கொண்ட ஒரு
சீமாட்டி பெண்னை
சந்திக்கச் செல்கின்றான்.
தான் எங்கணம் ஏழை
என்று விபரிக்கின்றான்.
இருபதிலிருந்து
இருப்பதுவரை எப்படி
வந்தான் என்றும்
புராணம் பாடி, 
இறுதியில் தன் குறையை 
முன்வைக்கின்றான்.

'யல' அறுவடை வரும்வரை 
பொறுத்திருந்து பெறு
என்றார் அந்த மெனிக்கே.

சின்ஞோ திரும்பவில்லை.
"ஓ... மழைக்காலம் நெருங்குகிறதே..
என் மனுஷி அஞ்சுவாள்.
அவள் குழந்தை நனைந்தால் 
எப்படித் துஞ்சுவான்."

மனமுருகிய மெனிக்கே
"ஆ.. அப்படியா..
பின்புறத்தில் கொட்டில் 
இருக்கிறது.
வேண்டியளவு நீயே
எடுத்துக் கொள்."

நாட்டுப்பாடல்கள் என்றும் 
இறக்காது என்பர்.
அதுபோல் சின்ஞோ அன்று 
மகிழ்ந்து பாடிய வரிகளில் 
இடமள்கொட-மெனிக்கே
இன்னும் இறக்காமல்
வாழ்ந்து கொண்டுதான் 
இருக்கிறார்.

(©"From the life of the folk poet Ysinno" - Lakdasa Wikkramasinha)

தமிழில் - Imaz

No comments:

Post a Comment