முட்டக் கண்ணு முழியழகி !
எட்ட நின்னு பாக்கையில.....
முட்டி போல உடையுதடி !
என் நெஞ்சு...
வட்ட முக வான்னிலவ
தொட்டு தொட்டு செஞ்சது போல்...
பட்டுப் போல இருக்குதடி !
உன் கன்னம்...
வேலை செய்ய முடியலடி !
வெட்ட வெளி மத்தியில,
பளிச்சுடுற மின்னலப் போல் -
பட்டு பட்டுன்னு தான்
வந்துபோற, என் புத்திக்குள்ள. ...
தெட்டத் தெளிவா தெரியுதடி ! -
இது உன்னோட வேலை தான் - ரத்தம்
இது உன்னோட வேலை தான் - ரத்தம்
சொட்ட சொட்ட உள்மனச
சுரண்டுறியே... ! உள்ளிருந்து...
நட்ட நடு ராத்திரில...
படுத்தாலும் தூக்கமில்ல..!
பட்டப் பகல் கண் திறந்தே
காணுறனே...
கனவினிலும் உன் தொல்ல...
கட்டெறும்பு போல நெஞ்ச
கடிக்குறியே இது என்ன. ..!
மெட்டெடுத்து பாடிடத்தான், வந்துடுடி !
புதுப் பொண்ணா ....
அட்டக்கத்தி, அந்த பார்வையால,
அழகுரதி !
வெட்டி வெட்டிப் போடுறியே !
வேளாண்மையா என் உசுர.....
குப்பத்தொட்டி போலிருந்தேன் !
இப்ப நீர்த்தொட்டியா மனசையுந்தான்,
மாத்திட்டியே சுத்தமாக.....
பட்டித்தொட்டி படர்ந்திடாதே !
பவளக்கொடி என்னவளே..!
மனசுக்குள்ள பூந்தொட்டி செஞ்சிருக்கன் !
கொஞ்சம் வந்து படந்துடணும்..!!!
தீப்பெட்டியா என் காதலடி.
தீப்பற்ற நீ வரணும்...!
தீஞ்சட்டியாய் நெஞ்சம் கருகுதடி..
நீரூற்ற நீ வரனும்..!!
©இளவரசன்



No comments:
Post a Comment