மாலையழகில் மரித்தேன் - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Tuesday, 20 November 2018

மாலையழகில் மரித்தேன்


யாருடைய மரங்களோ இவை?
யாரென்று நானெண்ணும்
அவருடைய வீடும் இங்குதானோ
இருக்கின்றது.
இருந்தும் அவர் அறிவாரோ..
பனியால் படிந்த இந்த மரங்களை
தனியாளாய் நான் இரசித்துக்
கொண்டு நிற்பதை...

என்னுடைய சிறு குதிரையோ..
சினுங்கக் கூடும்.
பன்னை வீடு வருமுன்
என்னை ஏன் நிறுத்துகிறார் என்று...
அதற்க்கெப்படிச் சொல்வேன்.
பனியை ருசிக்கும் மரங்களும்,
பனியால் நின்று யோசிக்கும் ஆறுகளும்,
அஸ்தமிக்கப்போகும்
அந்திமாலையை அழகூட்டிக்
கொண்டிருக்கின்றதே..
இதைப் பார்...! என்று..

என் குட்டிக்குதிரை
கழுத்தில் கட்டியிருக்கும் மணியை
ஒலித்து தட்டியெழுப்புகின்றது
மாலை கொண்ட அழகில்
மரித்துப் போன என்னை...
ராகம் பாடும் இளங்காற்று,
தூரல் போடும் பனிமூட்டம்
இவற்றைத் தவிர
மொத்த இயற்கையும்
மெளனித்திருந்த
தருணம் அது.!

இந்த மரங்களும், அவை
தரும் வரங்களும் இன்னும்
இன்னும் வேண்டும்.
இருந்தும் என் செய்வேன்.
எனக்கிருக்கும் கடமைகளையும்
எஞ்சியிருக்கும் தூரங்களையும்
யார் முடிப்பார்.
தூங்கும் முன்
தூரங்களைக் கடப்போம்.
தூங்காமல் வா
என் குதிரையே......


  (©"Stopping By Woods On A.  Snowy Evening" -  Robert Frost)

 தமிழில் - இளவரசன்

No comments:

Post a Comment