அழகே உன்னை ஒப்பிடவா? - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Tuesday, 20 November 2018

அழகே உன்னை ஒப்பிடவா?

ஏன்ஜல் அழகே..! உன்னை
மஞ்சல் வெயிலுடன் ஒப்பிடவா..?
நீயோ அதி அழகு..! எப்போதும்
நீ அதே அழகு..!

உலர்ந்த காற்றோ
உயர்ந்த மரங்களையும்
உதிர்ந்த மலர்களையும்
உரசிக் கொண்டு அலைகின்றது.

சூடான சூரியன் கூட
சிலசமயம் மேகத்தின் முதுகின்
பின் ஒழிந்து கொள்கின்றது.
அழகாய், அதிசயமாய்
திகழும் பொருளெல்லாம்
ஒருசமயம் ஓய்வேயின்றி 
ஒழிந்து கொள்ளத்தானே போகின்றது.
ஆனாலும், உன்
இளமையோ முதுமையாகாது.
இளையவள் நீ கொண்ட அழகோ 
இனிக்காலாவதியாகாது.

எல்லோரையும் மணந்துகொள்ளும்
மரணம் உன்னை மட்டும்
விவாகரத்துச் செய்துவிடும்.
நீயோ காலங்கள் பல தாண்டியும் 
வாழ்ந்திடுவாய்.
என் கவிதை வரிகளுக்குள் நிலையாய் 
கலந்திடுவாய்.

மானுட வர்க்கம் மண்ணாக 
மாறும் வரை..
இந்தப் பாவில் வாழும் நீ,
இந்தப் பாரிலும் வாழ்ந்து கொண்டேதான்
இருப்பாய்...!


(©"Shall I Compare Thee to a Summer's Day?" By William Shakespear)

தமிழில் - இளவரசன்


1 comment: